ரஜினிகாந்தும் நயன்தாராவும் நடித்த `தர்பார்’

ரஜினிகாந்தும் நயன்தாராவும் நடித்த `தர்பார்’ படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வரயிருக்கிறது. அதே தேதியில் தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்கள் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்களும் வெளிவர உள்ளன.

அந்த படங்களின் வசூலில் `தர்பார்’ படம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. `தர்பார்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது, மும்பையில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பெரும் பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.

—–

விவசாயத்தை மையப்படுத்தி வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு நடிகர் சூர்யா நிதி உதவி அளித்துள்ளார்.

உழவன் அறக்கட்டளை அமைப்பை தொடங்கியது குறித்து கார்த்தி கூறும்போது, “விவசாயிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் நமது நன்றி கடனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறேன். விவசாயிகளை போற்றும் வகையில் அவர்களுக்கு இந்த அமைப்பு மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும்” என்றார். தற்போது உழவன் அறக்கட்டளை மூலம் நடிகர் கார்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசு போட்டி என்ற தலைப்பில் புதிய போட்டியை அறிவித்துள்ளார்.

சிறு,குறு விவசாயத்தை எளிதாக்கும் நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களை தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறிஉள்ளார்.

கார்த்தி தற்போது கைதி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகாவுடன் நடித்து வருகிறார்.

——

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சமீபத்தில் சொகுசு வசதிகளுடன் சொந்தமாக கேரவன் வாங்கினார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் ரூ. 7 கோடி செலவில் புதிய கேரவன் வாங்கி இருக்கிறார். மும்பையில் உள்ள ஒரு கம்பெனி மூலம் இதனை வடிவமைத்து இருக்கிறார். அதற்கு பால்கன் என்று பெயர் வைத்துள்ளார். புதிய கேரவன் வாங்கியது குறித்து அல்லு அர்ஜுன் கூறும்போது, “என் வாழ்க்கையில் எது வாங்கினாலும் பெரிதாகவே வாங்கி இருக்கிறேன். ரசிகர்கள் என்மீது வைத்துள்ள அன்பினால் மட்டுமே இதுபோன்ற விலை மதிப்பில்லா பொருட்களை வாங்க முடிகிறது என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் இருக்கிறது” என்றார்.

Related posts