அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ளதால் ஏ சான்றிதழ்.!

இளைஞர்களின் மனதில் எப்போதுமே ஓர் இடத்தை தக்கவைத்து கொள்பவரே நடிகை அமலாபால். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆடை’. இப்படத்தை ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ளதால் தணிக்கை குழு இப்படத்திற்கு ”ஏ” சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 19-ந் திகதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாநேற்று நடைபெற்றது.

அதில் அமலாபால் பேசுகையில், “ஆடை படத்தில் நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், அந்த காட்சியின் படப்பிடிப்பின்போது எனக்கு படபடப்பாக இருந்தது. ஆனால் படக்குழுவினர் எனக்கு முழு பாதுகாப்பு அளித்தனர்.

அந்த காட்சி படமாக்கப்பட்டபோது கெமரா மற்றும் லைட்டிங் குழுவில் உள்ள 15 பேர் தவிர அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான் பாதுகாப்பாக இருந்தனர்.

ஆனால் எனக்கு இந்த 15 பேரும் கணவர்கள் போல தேவையான முழு பாதுகாப்பை அளித்தனர். இந்த அளவுக்கு அவர்கள் எனக்கு பாதுகாப்பு தரவில்லை என்றால் என்னால் அந்த காட்சியில் நடித்திருக்கவே முடியாது” என அவர் கூறினார்.

Related posts