டென்மார்க் கவிஞரின் நூல் வெளியீடு யாழ்ப்பாணத்தில்..

டென்மார்க் தலைநகரை அண்டியுள்ள கொல்பெக் நகரில் வாழ்பவர் பல்துறைக் கலைஞர் இணுவையூர் க.சக்திதாசன் இவர் எழுதிய கவிதையும், கதைகளும் கலந்த படைப்பான தொலைந்த கனவும் தொலையாத வாழ்வும் என்ற நூல் வெளியிடப்பட இருக்கிறது. எதிர் வரும் 30.06.2019 அன்று யாழில் இடம் பெறவுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து கவிஞர் வெளியிட்டுள்ள காணொளி அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்படுகிறது. நாட்டில் பிரச்சனை என்று செய்திகள் வந்தாலும் படைப்புக்கள் அதையெல்லாம் தாண்டி வேகமெடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கை புறப்பட அஞ்சற்க அஞ்சற்க என்று கவிஞரின் குரல் கேட்கிறது.

அலைகள் 29.06.2019

Related posts