வவுனியாவில் பெண்ணொருவர் கொலை

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக பொலிஸாரினால் நேற்று (21) மீட்கப்பட்டுள்ளார்.

செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட துடரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

04பிள்ளைகளின் தாயான ரவீச்சந்திரன் அந்தோனியம்மா (40) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலை தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில், செட்டிகுளம் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் வீட்டிற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் சந்தேகநபரை தேடி வருகின்றனர்.

குறித்த பெண், வெங்காய வெடி மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், சந்தேகநபர் அந்த வெடிபொருள் மூலம் படுகாயமடைந்த நிலையில் தப்பியோடியுள்ளார் எனவும், செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts