கொடிகாமத்தில் ரயில் மோதி பெண் உயிரிழப்பு

யாழ். கொடிகாமம், எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (21) பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் எழுதுமட்டுவாழை சேர்ந்த 50வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காங்கேசந்துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த ரயிலே குறித்த பெண் மீது மோதியுள்ளது.

குறித்த பெண், ரயில் பாதையை கடந்து செல்ல முற்பட்டபோது விபத்திற்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts