இன்று மாலை 3 மணி வரை 21 முறைப்பாடுகள்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும்.

அதன்படி இன்று (12) மாலை 3 மணி வரை 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பதிவு செய்யப்பட்ட 21 முறைப்பாடுகளில் 11 முறைப்பாடுகள் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று வரை 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக, பொலிஸ் தலைமையகத்தில் விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts