உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 22

கிறிஸ்துவுடனான வாழ்வு முடிவில்லாத ஒரு நம்பிக்கை.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமாகய்ப் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசம் போலருக்கும். நீதிமொழிகள் 4:18 (இன்றைய சிந்தனையை நன்றாக விளங்கிக் கொள்ள நீதிமொழிகள் 1, 2 அதிகாரங்களை வாசிக்கவும்).

வானிலை சரியில்லாத நாட்களில் எனது நண்பர் தன்னுடைய நடைப்பயிற்சியை ஒரு கால்மிதி மிசினில் செய்வார். ஆனால் அது தனக்கு அதிக சலிப்பை அளிக்கிறது என்பார். அந்த மிசினில் பொருத்தப்பட்டுள்ள ஓட்டோமீற்றர் அவர் பலமைல்கள் நடந்திருப்பதாக தெரிவித்தாலும்;, தான் நின்ற இடத்திலே இருக்கிறேன் என்பதுதான் உண்மை என்று கூறுவார்.

தேவனில்லாத ஒரு வாழ்க்கை அந்த கால்மிதி மிசினில் நடப்பது போன்றதாகும். சந்ததிகள் வருகின்றன. சந்ததிகள் செல்கின்றன (வச.4) ஒவ்வொருநாளும் சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது (வச. 5). காற்று பூமியின்மீது சுழன்று சுழன்று அடிக்கிறது (வச. 6). நதிகள் கடலில் கலந்தாலும் கடல் நிரம்புவதில்லை (வச.7). இந்த இயற்கை நிகழ்வுகளைப்போல வாழ்க்கை என்பது எப்போதும் ஓடிக்கொண்டி ருந்தாலும், அது எந்த இடத்தையும் சென்றடைவதில்லை. அது மாறிக்கொண்டிரு க்கிறது. ஆனால் அது புதிதாக எதையும் கண்டடைவதில்லை. பின்பு மரணம் சம்பவிக்கிறது. தேவனில்லாத மக்கள் நம்பிக்கையற்றவர்கள். அவர்களுடைய மரணத்திற்குப் பின்பு அனைவரும் அவர்களை மறந்து விடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். என்ன துயரமான எதிர்பார்ப்பு.

ஆனால் இதற்குமாறக தேவனை அறிந்தவர்களுடைய வாழ்க்கை எத்தனை வித்தியாசமானது. ஆம், அவர்களும்கூட சில வேளைகளில் சலிப்பையும் கடினத் தையும் அனுபவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு கால்மிதி மிசினில் நின்று கொண்டிராமல், பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருசில வருடங்களுக்கு முன்னர் 94 வயதுடைய நேயுற்றிருந்த எனது டெனிஸ் நண்பரை பார்ப்பதற்காக எனது மனைவியுடன் கோல்டிங் வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன். அவர் எப்பொழுதும் மகிழ்ச்சியாக பேசுபவர். தன்னுடைய வாழ்க்கையில் தான் செய்த பல நல்ல காரியங்களைக் குறித்து பேசியும், அப்போது எடுத்த புகைப்படங்களையும் காட்டியும் புன்னகைத்தவாறு உரையாடிக் கொண்டிருந்தார். என்னுடைய கிறிஸ்தவ வாழ்கை முழுவதிலும், நான் பரலோகத்திற்கு செல்வதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தேன். இப்பொழுது நான் அங்கு செல்லப்போகிறேன் என்று கூறினார்.

எங்களுடன் அங்கிருந்த அவரின் பேரப்பிள்ளைகளின் பிள்ளைகள் வரைந்து கொடுத்த ஓர் படத்தை எமக்கு காட்டினார். அதில் ஒரு வெண்புறா செட்டைகளை அடித்து உயரப்பறப்பது போல இருந்தது. இதுதான் என்வாழ்கைப் பயணம் என்றார்.

நீங்களும் அந்த நம்பிக்கையைப் பெறமுடியும். நீங்கள் ஒரு பாவி என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள். இயேசுவை உங்களுடைய இரட்சகராக, உங்களை சகல வேதனைகளிலும் இருந்து விடுவித்து ஆறுதலைத்தரும் தேவனாக ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது சலிப்பூப்டும் மிதி ஆலையைப் போலிருக்கும் உங்களுடை வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ள பயணமாக ஆண்டவராகிய இயேசு மாற்றுவார்.

அன்பின் பரமபிதாவே, இந்த சிந்தனையை வாசித்து தியானித்த ஒவ்வொருவருக் காகவும் உமக்கு நன்றி அப்பா. பலவிதமான சோதனை வேதனைகள், துன்பங்கள், மற்றவர்களுடன் பகிர்ந்து ஆறுதலைப் பெறமுடியாத சூழு;நிலைகள், நோயின் தாக்கத்தால் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலைகள், அடுத்தவர்களால் ஏமாற்றப்பட்ட சூழ்நிலைகள், மரணத்தைத்தவிர வேறு வழியில்லை என்ற அளவிற்குள் வாழும் நிலைகள்போன்ற சூழ்நிலைகளில் வாழும் மக்கள் ஒவ்வொருவருக்காகவும் உம்மிடத்தில் வருகிறேன் பிதாவே.

யார் யார் உள்ளம் உடைந்த நிலையில் ஆறுதலை அடைய வேண்டும் என்று வாஞ்ச்சிக்கிறாhகளோ, அவர்கள் அனைவரும் உம்முடைய நாமத்தினால் ஆறுதலை அடைந்து கொள்ள இரங்கும்படியாக உம்மிடத்ல் மன்றாடுகிறேன். இருள் என்கிறதான வேதனை வாழ்க்கை இன்றிலிருந்து அகன்று போவதாக. வெளிச்சத்தின் பிள்ளை களுக்குரிய ஆறுதலுடன்கூடிய மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைந்து கொள்வார் களாக. இழந்து போயுள்ள தேவனுடனான தொடர்புகள் மீண்டும் இணைக்கப்பட உதவட்டும். நேயர்கள் யாவரும் தேவனின் அன்பைக்கண்டு, அதற்குள் மகிழ்ந்து வாழவழி செய்யும்படியாகவும், இணையதளத்தில் பிரசுரிக்க அனுமதியளித்து பலர் ஆறுதலைப்பெற உதவும் ஆசிரியர், செல்லத்துரை குடும்பத்தினரையும் ஆசீர்வதித்து காத்துக்கொள்ளும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Related posts