கேர்னிங் நகரில நேற்றிரவு இரண்டு இளைஞர்கள் மரணம் 17, 18 வயது

டென்மார்க் கேர்னிங் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள லைலிகில் எனப்படும் தொடர்மாடி கட்டிடத்தில் உள்ள வீடொன்றில் இரண்டு இளைஞர்கள் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழன் இரவு 21.36 மணியளவில் இவர்களின் நண்பர்கள் செய்த போனைத் தொடர்ந்து போலீஸ் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளது.

இந்த இளைஞர்கள் உணர்வற்று கிடந்ததாகவும் அதனால் அச்சமடைந்து போன் செய்ததாகவும் நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்.

இவர்கள் போதை வஸ்த்தை உண்டுள்ளதாகவும் அது அளவு கூடிவிட்டதாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் தாமே போதை வஸ்தை எடுத்துள்ளதாகவும் செய்தி கூறுகிறது.

எத்தகைய போதை வஸ்த்தை எடுத்தார்கள், எவ்வளவு எடுத்தார்கள், அது என்ன போதை வஸ்த்து, எங்கிருந்து வந்தது.. ஏன் இப்படி செய்தார்கள்.. இவர்களின் பின்னணி என்ன.. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன..

அலைகள் 10.05.2019

Related posts