பிரியங்கா சோப்ராவை கலாய்த்த ரசிகர்கள்

தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா, ஆங்கில டி.வி. தொடர்களில் தலைகாட்டி ஹாலிவுட் பட வாய்ப்புகளை பிடித்தார்.

அதன்பிறகு அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்துகொண்டு அந்த நாட்டிலேயே குடும்பம் நடத்தி வருகிறார்.

கணவருடன் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் மேற்கத்திய பெண்களைப்போல் கவர்ச்சியான ஆடைகள் அணிந்து பிரியங்கா சோப்ரா கலந்துகொள்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மெட்காலா என்ற ஆடை வடிவமைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக்ஜோனாசுடன் பங்கேற்றார்.

அப்போது கவர்ச்சி உடை, வித்தியாசமான மேக்கப், சிகை அலங்காரம் போன்றவற்றால் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருந்தார் பிரியங்கா சோப்ரா. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

இதெல்லாம் ஒரு ஆடையா, இப்படி அலங்கோலமாக மேக்கப் போடலாமா? தலைமுடியை மாற்றி அழகை அலங்கோலமாக்கி விட்டீர்களே என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் கேலி செய்து மீம்ஸ் போடுகின்றனர்.

சந்தன கடத்தல் வீரப்பன் மீசை, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் தலைமுடி ஆகியவற்றுடன் அவரது சிகை அலங்காரத்தை ஒப்பிட்டும் கேலி செய்து வருகிறார்கள்.

Related posts