விஜய் நடிக்கும் 3 புதிய படங்கள்

இந்தியில் வெற்றிகரமாக ஓடிய 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் இவர்கள் கூட்டணியில் முன்பு வெளியானது.

விஜய்யை 3 புதிய படங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றில் ஒரு படத்தை மோகன்ராஜா இயக்குவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திரைக்கு வந்து வசூல் குவித்த வேலாயுதம் படத்திலும் இவர்கள் இணைந்திருந்தனர். இன்னொரு படத்தை ஷங்கர் டைரக்ட்டு செய்கிறார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் இவர்கள் கூட்டணியில் முன்பு வெளியானது.

மூன்றாவதாக மகேஷ்பாபு நடித்து தெலுங்கில் வசூல் குவித்த மகரிஷி படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பார் என்று பேசப்படுகிறது. ஏற்கனவே மகேஷ்பாபுவின் ஒக்கடு படம் தமிழில் கில்லி என்ற பெயரிலும், போக்கிரி படம் அதே பெயரிலும் விஜய் நடிக்க ரீமேக் செய்து வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.

இந்த 3 படங்களும் பேச்சுவார்த்தையில்தான் இருக்கிறது என்றும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் நெருக்கமான வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ஜாக்கிஷெராப் வில்லனாக நடிக்கிறார். கதிர், யோகிபாபு, இந்துஜா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். நண்பனை கொன்றவர்களை பழிவாங்கும் கதை. படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Related posts