தோட்டா மீட்பு தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

இன்று (30) காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் தமக்கு எவ்வித சம்பந்தும் இல்லை என தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ஊடக அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காத்தான்குடியிலுள்ள தனது காரியாலயம் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அங்கு மீட்கப்பட்ட 40 தோட்டாக்களும், தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டதென அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் பொலிசாருக்கு உரிய அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை குறித்த அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்ட இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts