முஸ்லிம்களை ஓரங்கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் மிகமோசமான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதுடன், இத்தருணத்தில் முஸ்லிம் சமூகத்தினரை ஓரங்கட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.

அத்துடன் சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு சம்பவங்கள் அப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் வழங்கிய தகவல்களை அடுத்தே மேற்கொள்ளப்பட்டன.

முஸ்லிம் மக்கள் தமது சமூகத்திற்குள் உருவாகியிருக்கும் தீவிரவாதத்தை விரும்பவில்லை. அதனை முற்றாக இல்லாதொழிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அவர்கள் முன்வந்திருக்கின்றார்கள். எனவே அதனைப் புரிந்துகொண்டு நாமனைவரும் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் தினம் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts