தமிழ் சினிமா செய்திகள் தொகுப்பு மூன்று..

தலையில் ஹெல்மெட், கைகளில் கிளவுஸ், கால்களில் பேட் இல்லாமல் ஆடும் இந்த விளையாட்டு ரஜினி ஸ்டைல் கிரிக்கெட்டாகிவிட்டது. அவர் நடிக்கும் தர்பார் பட ஷூட்டிங் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மும்பையில் தொடங்கியது. தேர்தல் நாளான்று சென்னை வந்த ரஜினி தனது வாக்கை பதிவு செய்துவிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக ரஜினி மட்டும் படப்பிடிப்பிலிருந்த நிலையில் தற்போது நயன் தாராவும் பங்கேற்றிருக்கிறார்.

மும்பை பூங்கா பகுதி ஒன்றில் ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் நெட்டில் வலம் வருகிறது. அருகில் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இருக்கின்றனர். இது படத்திற்கான காட்சியா அல்லது படப்பிடிப்பு இடைவேளயில் கிடைத்த ஓய்வு நேரத்தில் ஜாலியாக ரஜினி விளையாடிய நிகழ்வா என்பதுபற்றி தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் ரஜினியின் தர்பார் ஸ்டில்கள் அடிக்கடி லீக் ஆவது படக்குழுவுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.

—————

கே.ஜி.எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் உதவியாளர் நார்தன் இயக்கும் புதிய படத்தில் முதல் முறையாக சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். சிம்பு நடிக்கும் 45வது படம். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்ய, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். ஆக்‌ஷன் திரில்லர் கதை கொண்ட இப்படத்தின் ஷூட்டிங், வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது.

———-

காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத், இரண்டு கேரக்டர்களில் நடிக்கும் படம், பேரழகி ஐ.எஸ்.ஓ. நீ என்ன மாயம் செய்தாய், மித்ரா ஆகிய படங்களில் நடித்த விவேக் ஹீரோ. தவிர சச்சு, சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், டெல்லி கணேஷ் நடிக்கின்றனர். எடிட்டர் பி.லெனின் உதவியாளர் விஜயன் தயாரித்து இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது: முதியவர்களை இளைமையாக்கும் ரகசியம் பழங்கால ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளது.

அது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கையில் கிடைத்து, சோதனை முயற்சியாக சச்சு பாட்டியிடம் செயல்படுத்தப்படுகிறது. உடனே சச்சு இளம் பெண்ணாக மாறுகிறார். அவரது பேத்தி ஷில்பா மஞ்சுநாத்துக்கும், அவருக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகள் மற்றும் கருப்பு நிறம், எது அழகு என்பது குறித்த சமூகப் பிரச்னையும் ேவடத்தில் பேசப்படுகிறது. சச்

Related posts