இலங்கை தாக்குதல்களால் டென்மார்க் கலைஞர் சங்க விழா நிறுத்தம்

இலங்கையில் இடம் பெற்ற கோரமான தற்கொலை குண்டு தாக்குதல்களினால் தமிழ் மக்கள் பெரும் துயரடைந்துள்ளார்கள்.

டென்மார்க்கில் மூன்று பேர் இறந்த விடயம் டென்மார்க் என்ற நாட்டையே ஆட்டிவிட்டது.

இந்த நேரம் நாம் கலைவிழா ஒன்றை நடத்துவது சரியா..?

மக்கள் நெஞ்சங்களில் கவலை நிலவுகின்றது..

ஆகவே டென்மார்க் கலைஞர் சங்கம் நடத்த இருந்த பாடல் நடனப்போட்டி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெறுவதாலும்..

ஊரடங்கு சட்டத்தின் பிடியில் மக்கள் வாழ்வதாலும்..

இலங்கை போன மக்கள் போர்க்கால சூழலை அனுபவிப்பதாலும்..

நமது விழா நிறுத்தப்படுகிறது என்ற தொனி டென்மார்க்கில் புதிதாக இருக்கிறது..

டென்மார்க்கில் தினசரி அஞ்சலி நிகழ்வுகள் நடப்பது தெரிந்ததே.

அலைகள் 28.04.2019

Related posts