ஐந்து ரூபா பெறுமதியில்லாத பாம்பிடம் கொத்து வாங்க பார்த்த நடிகர்..

பெறுமதியற்றது உயிர் என்கிறார்கள்.. ஆனால் ஐந்து ரூபா பெறுமதியில்லாத பாம்பு கொத்தினாலும் உயிர் பிரிந்துவிடும் ஆபத்துள்ளது.

ஆயிரம் கோடி பெறுமதியான அணு குண்டு விழுந்தாலும் அதுதான் கதை..

இது நம்ம சத்தியராஜ் மகன் சிபி ராஜ் கண்ட உண்மை.

நடிகர் சிபிராஜ் மிகவும் கவனமாக தனது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருக்கு நேர்ந்த ஒரு சம்பவம் வாழ்க்கையே நிலையில்லாதது என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இதுபற்றி அவர் கூறியது: சில தினங்களுக்கு முன் உடுமலையில் உறவினர் இல்லத்துக்கு சென்றேன். அங்கு வந்த இளைஞர்கள் புகைப்படம் எடுத்தபோது காலுக்கடியில் உஷ் உஷ் என்று சத்தம் கேட்டது. கேமிரா பிளாஷ் ஒளியில் பார்த்தபோது என் கால் அருகே பெரிய பாம்பு தனது இரவு நேர சாப்பாட்டுக்காக தவளையை வேட்டையாட மும்முரமாக இருந்தது. கவனிக்காமல் அதன் அருகே சென்றுவிட்டதால் அதிர்ச்சி யில் ஒரு நொடி ஸ்தம்பித்துப்போனேன். இப்படியொரு காட்சியை நான் எண்ணிக்கூட பார்க்கவில்லை. அப்போதுதான் வாழ்க்கையே நிலையில்லாதது என்ற எண்ணம் என் சிந்தனையில் மின்னலாக தோன்றி மறைந்தது’ என்றார்.

—————

தல அஜீத், தளபதி விஜய் என்று இருவருக்கும் பட்டப்பெயர் வைத்து கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். இருவருக்கும், நீங்கள் என்ன பட்டப் பெயர் வைப்பீர்கள் என்று கீர்த்தி சுரேஷிடம் நடிகை குஷ்பு நிகழ்ச்சி ஒன்றில் கேட்டார். அதற்கு பதில் அளித்த கீர்த்தி, அஜீத் ரொமான்டிக் ஹீரோ, விஜய்-டான்ஸிங் ஹீரோ, சூர்யா சென்டிமென்ட் ஹீரோ என்று பதில் அளித்தார். இந்நிலையில் அஜீத்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தளபதியா? தலையா? என்று கேட்டபோது தளபதியா… மணிரத்னம் இயக்கிய தளபதி தானே… என்று பதில் அளித்தார். ஸ்ரத்தாவின் பதிலை கேட்டு டென்ஷன் ஆன விஜய் ரசிகர்கள்,’என்னதான் அஜீத் படத்தில் நடித்தாலும் தளபதி யார் என்று கூடவா தெரியாது’என விமர்சித்து கமென்ட் பகிர்கின்றனர்.

———-

பணம் இருந்தால் எப்படியெல்லாம் பந்தா காட்டுவது என்பது அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கில் செலவிட்டு கார், பங்களா வாங்கு வது அவர்களது தேவையாக கூட இருக்கலாம். ஆனால் நடிகை சோனம் கபூர் காட்டிய பந்தாவை கண்டு பலரும் வாயடைத்துபோயிருக்கின்றனர். இந்தி நடிகர் அனில் கபூரின் மகளான சோனம், நடிகர் தனுஷ் ஜோடியாக ராஞ்சனா படத்தில் நடித்தவர். தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துகொண்ட சோனம் கபூர் ஆடம்பர வாழ்க்கையில் திளைத்திருக்கிறார். விதவிதமான உடை என்ன? வகை வகையான கார் என்னவென்று ஜமாய்க்கிறார். சமீபத்தில் மும்பை விமான நிலையத்துக்கு வந்த சோனம், பளபளக்கும் ஸ்டைலான கைப்பை ஒன்றையும் எடுத்து வந்தார். அந்த பையின் விலை ரூ 18 லட்சமாம். இவ்வளவு விலைக்கு ‘1 பிஎச்கே’ வீட்டையே வாங்கலாமே என்று சிலர் உறைந்துபோயினர்.

Related posts