ரஜினி படத்தில் நகயன்தாரா நாயகி முருகதாஸ் இயக்கம்

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியானது. அவரது அரசியல் பிரவேசம் தள்ளிப்போவதால் மீண்டும் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

இந்த படத்தை ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்களை எடுத்து தமிழ் பட உலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தின் கதையை 5 மாதங்களுக்கு முன்பே ரஜினியிடம் சொல்லி ஒப்புதல் பெற்ற முருகதாஸ் திரைக்கதையில் பரபரப்பை ஏற்றி திருப்பங்களுடன் மேலும் மெருகூட்டி வந்தார். அந்த பணிகள் தற்போது முடிவடைந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி மும்பையில் படப்பிடிப்பை தொடங்க தயாராகி உள்ளனர்.

இது அரசியல் படம் என்றும், நாற்காலி என்று பெயர் வைத்துள்ளனர் என்றும் இணையதளங்களில் தகவல் பரவியது. ஆனால் முருகதாஸ் தரப்பில் இதனை மறுத்தனர். ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அரசியல் சமூக விஷயங்கள் கலந்த படமாக தயாராகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது. இந்தி நடிகைகளையும் பரிசீலித்தனர். தற்போது நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். ஏற்கனவே சந்திரமுகி படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு இருவரும் நடனம் ஆடி இருந்தனர். குசேலன் படத்திலும் ஒரு காட்சியில் கவுரவ தோற்றத்தில் நயன்தாரா தலை காட்டினார்.

Related posts