மொஸாம்பிக் நாட்டில் பெரு மழை 1000 பேர் மரணம்..

மொஸாம்பிக், ஸிம்பாப்பே, மலாவி நாடுகளில் இடாய் என்ற புயல் வீசி பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

மொஸாம்பிக்கில் இதுவரை 89 பேர்களின் மரணங்கள் ஊர்ஜிதமானது ஆனால் இறந்தோர் தொகை 1000 தொடும் என்று அந்த நாட்டின் றேடியோ மொஸாம்பிக் கூறுகிறது.

பெய்ரா என்ற பெரிய நகரம் முற்றாக அழிந்துவிட்டது. சுமார் 90 வீதம் நாசம், விமான நிலையமும் செயல் இழந்தது.

வெள்ளத்தால் நீர்த்துப் போன கட்டிடங்கள் இனி விழ ஆரம்பிக்கும், வாந்தி பேதி, போன்ற பல துயர்கள் தொடரப்போகின்றன.

அலைகள் 19.03.2019

Related posts