எண்ணம் பலித்ததாக.. ஸ்ருதி ஹாசன் புதிர்

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில், சிங்கம் 3 படத்தில் நடித்தபிறகு வருடக் கணக்கில் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். ஆனாலும் இணைய தளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் அவர் ஏதோ ஒரு விஷயத்தை மறைத்து மகிழ்ச்சியான மெசேஜ் பகிர்ந்தார். ‘என்னைப் பொறுத்தவரை அது நடந்து விட்டது. என்ன நடக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தேனோ கடைசியாக உண்மையாகிவிட்டது.

தற்போதைக்கு நான் சந்தோஷமாக இருக்கிறேன். எல்லா நலன்களையும் இறைவன் எனக்கு அருளியிருக்கிறான்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த மெசேஜில் ஸ்ருதி எதைப்பற்றி கூறுகிறார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது அவரே அதற்கு விடை கூறினால்தான் ஸ்ருதியின் சந்தோஷத்திற்கான காரணம் தெரியவரும்.

Related posts