அலைகள் வாராந்தப் பழமொழிகள் 16.03.2019

01. நீங்கள் ஒரு பின்னடைவை சந்திக்கிறீர்களா.. அப்போதும் கவலை வேண்டாம்.. பிரமாண்டமாகவே சிந்தியுங்கள்.

02. எப்போதுமே நடவடிக்கை எடுக்கும் பழக்கத்தை பின் போட வேண்டாம் சூழ்நிலை கனியும்வரை காத்திருக்கத் தேவையில்லை.

03. உங்கள் யோசனைகள் மீது நடவடிக்கை எடுக்க மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

04. இக்கணம் என்பது ஒரு மாஜா ஜாலம் அதை உணர்ந்து செயற்படுங்கள்.

05. துணிந்து பேசும் பழக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதன் மூலமாக உங்களுக்கு வலுவூட்டிக் கொள்ளுங்கள்.

06. நீங்களாகவே முன்வந்து முயற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது ஒரு தனித்துவ நடவடிக்கையாகும்.

07. தோல்வி என்பது ஒருவிதமான மனோநிலையே என்பதைக் கண்டறிந்து கொள்ளுங்கள். ஒரு விடயத்தை தோல்வியாகவும் வெற்றியாகவும் பார்ப்பது மனம்தான்.

08. ஒவ்வொரு பின்னடைவில் இருந்தும் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும்.

09. ஆக்கபூர்வமாக சுய விமர்சனத்தை எப்போதும் செய்து கொள்ளுங்கள்.

10. விடாமுயற்சி மூலமாக நேர்மறையான பயன்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

11. ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒரு நேர்மறையான பக்கத்தை கண்டு பிடிப்பதன் மூலமாக ஊக்க இழப்பை விரட்டியடியுங்கள்.

12. வாழ்வில் நீங்கள் எங்கே சென்றடைய இருக்கிறீர்கள் என்பதை தெளிவாக அறிந்து வைத்திருங்கள்.

13. திட்டவட்டமான இலக்குகளை வகுப்பதன் மூலமாக உங்கள் ஆற்றலை பெருக்கிக் கொள்ளுங்கள்.

14. விஷயங்களை சாதிப்பதற்கும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வதற்கும் உரிய இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலமாக உங்கள் ஆற்றலை பெருக்கிக் கொள்ளுங்கள்.

15. நீங்கள் யார் மீது தாக்கம் விளைவிக்க இருக்கிறீர்களோ அவர்கள் மனங்களை புரிவதற்கான சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

16. மனித நேயத்துடன் நடந்து கொண்டு அணுகுமுறையை நல்வழியில் மாற்றியமையுங்கள்.

17. முன்னேற்றத்தை பற்றி சிந்தியுங்கள், முன்னேற்றத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள், முன்னேற்றத்திற்காக பாடுபடுங்கள்.

18. நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளரா என்பதை அறிய உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்.

19. உங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்புங்கள் அப்போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

20. வெற்றி என்பது பல அற்புதமான நேர்மறையான விடயங்களை குறிக்கும். உங்கள் குழந்தைகளுக்கு தனிப்பட்ட அனுகூலங்களை கொடுத்தல், போன்ற தனிப்பட்ட செழிப்புக்களும் வெற்றிதான்.

21. வெற்றி என்றால் அடுத்தவர் உங்களைக்கண்டு பிரமிக்க செய்வது. தலைமைப்பதவியை பெறுவது போன்றவற்றை கொண்டிருக்கும்.

22. கவலை, பயம், விரக்தி, தோல்வி ஆகியவற்றில் இருந்து விடுபட்டிருப்பதும் வெற்றிதான்.

23. வெற்றி என்பது சுய மதிப்பு என்றும் அர்த்தம் பெறும். வாழ்வில் தொடர்ந்து அதிக மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அனுபவிப்பதும், உங்களை சார்ந்துள்ளவர்களுக்கு நல்ல விடயங்களை செய்வதும் வெற்றிதான்.

24. அதிகமான நல்ல விஷயங்களை செய்ய முடிவதும் கூட வெற்றிதான்.

25. சாதனைதான் வெற்றி அதுதான் வாழ்வின் இலக்கு.

பழமொழிகள் தொடர்ந்தும் வரும்.

அலைகள் 16.03.2019

Related posts