தெல்லிப்பழை மகாஜன கல்லூரியில் புத்தகம் வழங்கும் நிகழ்வு

தெல்லிப்பளை மகாஜன கல்லூரி உதைபந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள் விளையாடிய புகழ் பெற்ற பாடசாலை. இந்தப் பாடசாலைபோலவே அருகில் அமைந்திருக்கும் யூனியன் கல்லூரி, மற்றும் அளவெட்டி அருணோதயா போன்ற கல்லூரிகள் ஒரு காலத்தில் உதைபந்தாட்டத்தில் யாழ். குடாநாட்டில் சாதனை படைத்த பாடசாலைகள்.

இந்தப் பாடசாலைகளுக்கு டென்மார்க்கில் வாழும் எழுத்தாளர் கி.செ.துரை எழுதிய உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி அடுத்த வாரம் யூனியன் கல்லூரி..

மேலும் நேற்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நூல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து யாழ். பேருந்து நிலையத்திலும் புத்தக தின சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன.

இது வரை 5000 பிரதிகள் கடந்து விட்டன.. தொடர்கிறது பயணம்..

தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் படித்த டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் சிலரின் உதவியுடன் இந்த நூல்கள் வழங்கப்பட்டன. இது தொடர்பான காணொளியும் இத்துடன் இடம் பெறுகிறது.

அலைகள் 08.03.2019

Related posts