உடலையும் மனதையும் சமநிலைப்படுத்திய அமலாபால்

நடிகை அமலாபால் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ராட்சசன் படத்திற்கு பிறகு ஆடை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கிடைத்த இடைவேளையில் திருவண்ணாமலைக்கு வந்த அமலாபால், மலைமீது சென்று நாளை மகிழ்ச்சியுடன் கழித்தார். இதுகுறித்து அமலாபால் கூறும்போது, ‘திருவண்ணாமலைக்கு வந்தது மனதளவிலும், உடலளவிலும் என்னை சமப்படுத்திக் கொண்டதுபோன்று உணர்கிறேன். இயற்கை உணவு எடுத்துக்கொண்டேன்.

மாலையில் வெளியில் சென்று இசை ரசித்தபடி உணவு உட்கொண்டேன்’ என்றார். முன்னதாக சில தினங்களுக்கு முன் அமலாபால் லுங்கியை முட்டி காலுக்கு மேல் உயர்த்தி கட்டியபடிபோஸ் அளித்திருந்தார். காவி லுங்கியை ஏற்றிக்கட்டியிருந்த அவரது புகைப்படத்தை பார்த்த பலர் அவரை கடுமையான விமர்சித்தார்கள்.

இந்நிலையில் மீண்டும் லுங்கி அணிந்திருக்கும் புகைப்படத்தையும், லுங்கியுடன் நடனம் ஆடும் படங்களையும் வெளியிட்டு உசுப்பேற்றியிருக்கிறார் அமலா. அவரது படத்தை பார்த்த நெட்டிஸன்கள் லுங்கியை இன்னும் உயர்த்தி கட்டி டான்ஸ் ஆடுங்கள் என்றும், உங்களுக்கு உடுத்த உடையே இல்லையா என்றும் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் தனது அடுத்தநாள் படப்பிடிப்பு பற்றிய ஆலோசனையில் ஈடுபட சென்றுவிட்டார் அமலாபால்.

Related posts