எமி ஜாக்ஸனின் மாஜி காதலன் திடீர் நிச்சயதார்த்தம்

ஐ, 2,0 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் எமி ஜாக்ஸன். இந்தியிலும் சில படங்களில் நடித்தார். தமிழில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கான ஏக் திவானா தா படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதில் ஹீரோவாக பிரதிக் பாப்பர் நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. காதல் பறவைகளாக சுற்றிதிரிந்த இவர்கள் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்றதுடன் ஒருவர் பெயரை மற்றொருவர் காதல் நினைவாக டாட்டூ போட்டுக்கொண்டனர். நாளடைவில் இவர்களுக்குள் மனக் கசப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு இருவரும் பிரேக் அப் செய்து கொண்டு பிரிந்தனர். பின்னர் இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜ் பன்னாயிட்டோ என்ற கோடீஸ்வர தொழில் அதிபருடன் எமிக்கு நட்பு ஏற்பட்டது.

அது காதலாக மலர்ந்தது. சமீபத்தில் அவருடன் நிச்சயதார்த்தமும் நடந்தது. எமியும், ஜார்ஜும் ஒரு சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மாஜி காதலி எமி ஜாக்ஸனின் நிச்சயதார்த்த தகவல் அறிந்ததும் பரபரப்பான பிரதிக் பாப்பர் உடனடியாக தனது திருமணத்தை முடிக்க எண்ணினார். கடந்த வாரம் பிரதிக், தனது புதிய காதலி சான்யா சாகருடன் கைகோர்க்க முடிவு செய்தார்.

சில தினங்களுக்கு முன் பிரதிக். சான்யாவுக்கும் லண்டனில் உள்ள பண்ணை வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணமும் விரைவில் நடக்க உள்ளது.

மாஜி காதல் ஜோடி பிரதிக், எமி ஜாக்ஸன் யார் முதலில் திருமணம் செய்வது என்ற போட்டியில் குதித்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts