தேர்தலை பிற்போட மைத்திரி – ரணிலின் நோக்கம் இதுதான்

எல்லை நிர்ணயத்தை காட்டி மாகாணசபை தேர்தலை பிற்போடும் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சிக்கும், தனது இருப்பை தக்கவைக்கை முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டிய நோக்கம் ஜனாதிபதிக்கும் உள்ளது. எவ்வாறு இருப்பினும் முதலில் மாகாணசபை தேர்தலை நடத்தி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என மக்கள் விடுதலை முன்னணி சபையில் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் நலனுக்காக வட மாகாண தேர்தலை அரசாங்கம் நடத்தவில்லை. சர்வதேச அழுத்தமே வடக்கு தேர்தலை நடத்தக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாணசபை தேர்தலை நடத்தக் கோரி எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையின் மீதான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.

Related posts