போருக்கு பிந்தைய வாழ்க்கை படம்

போருக்கு பிந்தைய வாழ்க்கை கதையாக உருவாகிறது ஒற்றை பனைமரம். மண் என்ற படத்தை இயக்கிய ராசையா இயக்குகிறார். எஸ்.தணிகைவேல் தயாரிக்கிறார். புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா, பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் நடித்துள்ளனர். படம் பற்றி எஸ்.தணிகைவேல் கூறும்போது,’போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் இப்படம் சமகால சூழலில் முன்னாள் போராளிகளுக்கும், மக்களுக்கும் இடையேயான கதையாக துணிச்சலுடன் சொல்லியிருக்கிறோம்.

யதார்த்தமான நடிப்பு இயல்பான காட்சிகள் ஈழத்தில் கிளிநொச்சியில் உள்ள கிராமத்துக்கு அழைத்து சென்றுவிடும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். உண்மை சம்பவங்கள் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு இசை அமைத்திருக்கும் அஷ்வமித்ரா தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை பயன்படுத்தியிருக்கிறார். மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு. 37 சர்வதேச விருதுகளுக்கு தேர்வாகி பல விருதுகள் பெற்றிருக்கிறது’ என்றார்.

Related posts