இன்று முதல் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்கின்றன

தை பிறந்துவிட்டதா வழி பிறக்கிறதா என்று யோசித்தால் வழியில் போகும் பொதுத்துறை வாகனங்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளன என்பதுதான் இன்றைய செய்தி.

தை 20 ம் திகதி பேருந்து, ரயில், மெற்றோ என்பவற்றின் கட்டணங்கள் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப 2.1 வீதம் உயர்வடைகின்றன.

இந்த விலை உயர்வானது இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

இந்த முடிவை யார் எடுத்தது என்று கேட்காதீர்கள்..?

இது பழைய முடிவு..

அரசாங்கம் ஐம்பது கோடி அறுபது கோடி ஒதுக்குவதாக தலைப்பு செய்திகள் வெளியிடும் பின்னர் நான்கு வருடங்களுக்கு என்று மெல்லிய குரலில் இன்னொரு உப செய்தி வரும்.

ஆனால் தொலைக்காட்சிகள் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 15 கோடி என்று தலைப்பு செய்தி போடாது.. அறுபது கோடி என்று அடித்து முழக்கும்.

அது போலத்தான் அடுத்து வரும் ஆண்டுகளில் பேருந்து கட்டணம் படிப்படியாக உயரும் என்று வெளியான பழைய தகவலை அடியொற்றி இந்த உயர்வு ஏற்படுகிறது.

இப்போதே பொதுப்போக்குவரத்து கட்டணம் விஷம் போல ஏறிவிட்டதாக மக்கள் கூறுகிறார்கள், அதற்குள் இப்படியொரு ஏற்றம்.

என்ன செய்வது மக்கள்…?

அள்ளுவாரோடு கூடினாலும் கிள்ளுவாரோடு கூடாதீர்கள் என்பது பழமொழியல்லவா..?

வரித்துறை அள்ளும்..

அரசாங்கம் கிள்ளும்..

நடுவில் மக்கள்..

இதுதான் யதார்த்தம்;…!

பாக்கு வெட்டி பாக்கை சீவி முடிப்பது போலத்தான் வாழ்வன்றோ..?

அலைகள் 20.01.2019 ஞாயிறு

Related posts