இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி

புதிய படமொன்றில், இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி.

‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில், இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்தப் படத்துக்காக 150 வருடம் பழமை வாய்ந்த சர்ச் செட் ஒன்று போடப்பட இருக்கிறது. விஜய் சேதுபதி தற்போது நடித்துவரும் படங்களில் இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை எனக் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தப் படம், சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்சினை பற்றியும் பேசுகிறது. மார்ச் மாதம் தொடங்கும் இதன் படப்பிடிப்பு, மூணாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Related posts