பேட்ட படத்துக்கு வரவேற்பு: விநியோகஸ்தரின் வாழ்த்து

பேட்ட’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், விநியோகஸ்தர் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு ரஜினி பதிலளித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘பேட்ட’ படத்துக்கு மக்களிடையே கிடைத்த ஆதரவு தொடர்பாக பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம், “சார். திருப்பூர் சுப்பிரமணியம் பேசுறேன். ரொம்ப அருமையான படம் சார். ஆடியன்ஸ் ரொம்ப நல்லா ரசிக்கிறாங்க. நல்ல ஒரு பெரிய ஹிட்டான படம். பொங்கலுக்கு ரொம்ப நல்ல படம் கொடுத்துருக்கீங்க. வாழ்த்துகள் சார்” என்று ரஜினிக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ செய்தி அனுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக ரஜினி, “ரொம்ப நன்றி திருப்பூர் சுப்பிரமணியம் சார். ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் சொன்னா மொத்த திரையுலகமே சொன்ன மாதிரி. ரொம்ப சந்தோஷம் உங்கள் வாயால் கேட்பதற்கு. ரொம்ப நன்றிங்க. தேங்கஸ் ய லாட்” என்று பதிலளித்துள்ளார். இந்த இரண்டு ஆடியோ ஃபைல்களுமே தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

Related posts