குழந்தை வந்தவுடன் நம் வாழ்க்கையே மாறி விடுகிறது

சமீபத்தில் தாயான பிரபல நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, குழந்தை வந்தவுடன் நம் வாழ்க்கையே மாறிவிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

32 வயதான சானியா மிர்சா, சமீபத்தில் குழந்தைக்கு தாயானார். குழந்தைக்கு இசான் மிர்சா மாலிக் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 6 முறை கிராண்ட் ஸ்லாம்களை வென்ற சானியா, மீண்டும் தனது டென்னிஸ் பயிற்சியை ஆரம்பித்துள்ளார். கண்காட்சி ஒன்றில் இதுகுறித்துப் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ”இத்தனை நாள் வரை மனைவியாக இருந்தேன். இப்போது தாயாகி உள்ளேன். டென்னிஸில் மீண்டும் முதலிடத்துக்குத் திரும்ப முயற்சிக்கிறேன். அது அத்தனை எளிதான காரியமல்ல என்று எனக்குத் தெரியும். ஆனாலும் முயற்சிப்பேன்.

ஒரு குழந்தை வீட்டுக்கு வந்தால் நம் வாழ்க்கையே மாறி விடுகிறது. அங்கு உங்களுக்கு முன்னுரிமை இருக்காது. உங்களுக்கு அங்கு வேலையில்லை. எல்லாமே குழந்தையைப் பற்றித்தான். அப்போது உங்களின் வாழ்க்கையே தன்னலமில்லாமல் மாறிவிடுகிறது. அதுதான் தாய்மையும் கூட.

அதே நேரம் விளையாட்டு வீரராக கொஞ்சம் சுயநலமாகவும் இருக்க வேண்டியுள்ளது. உங்களின் ஃபிட்னஸ், வேலை, ஃபார்முக்குத் திரும்புவது இதில் அடங்கும்.

இதனால் ஒரே நேரத்தில் குடும்பத்தையும் கேரியரையும் கொண்டுசெல்ல வேண்டி உள்ளது” என்றார் சானியா.

Related posts