பேஸ்புக் காதல் இசையும் கதையும் தயாரிப்பும் வெளியீடும்

இன்று அலைகளில் வெளியாகும் பேஸ்புக் காதல் என்ற இசையும் கதையும் சொல்ல வரும் செய்தி என்ன..?

தமிழ் பெற்றோரில் பலர் தமது பிள்ளை டாக்டராக படித்து பட்டம் பெற வேண்டும் என்று கருதுகிறார்கள். அப்படி படிப்பதால் என்ன இலாபம்..? அதுவும் ஒரு தொழில்தான் என்பதை புரிய முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

டாக்டர் விவகாரத்தில் பெற்றோர் தவறு செய்கிறார்கள் என்று கூறுவதைவிட, தமிழ் சமுதாயம் இதில் பெரிய பாத்திரம் வகிக்கிறது என்பதே உண்மை. டாக்டர் என்றால் பெரிய படிப்பு என்று அது கருதுகிறது. இவ்வாறு கருதுவோரில் 90 வீதமானவர்களுக்கு படிப்பு, அதன் கட்டமைவு பற்றி எதுவுமே தெரியாது.

தெரிந்தால் டாக்டர் படிப்போ அது போல மற்றெந்த படிப்புமோ பெரியதல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரியவரும்.

இந்த உலகத்தை விளங்கி, அதற்கமைய வெற்றிகரமாக வாழத் தெரிந்தால் அவனே சிறந்தவன் என்கிறார் வள்ளுவர். எந்தவொரு படிப்பையும் சுட்டிக்காட்டி அதுவே சிறந்ததென அவர் சொல்லவில்லை.

அறிவறிவு வேண்டும் என்கிறார்.. அது எங்கு சென்றாலும் அந்த சூழலுக்கு அமைய வாழும் திறமை. அவ்வளவுதான் அதற்கு மேல் அலட்ட வேண்டாமே..

ஒருவர் டாக்டராக படித்து முடித்தால் அதன் பின் சமுதாயம் அவருக்கு என்ன பெருமை தருகிறது. அப்படி பெருமைதர தமிழ் சமுதாயத்திடம் என்ன இருக்கிறது.. இந்தக் கேள்வியை பிள்ளைகளும் உணர்வதில்லை. பெற்றோருக்கு சமுதாயத்தின் சுயநலம் பலவீனம் போன்றன தெரியாதிருப்பதை கட்டுடைவு செய்ய பிள்ளைகளுக்கும் அறிவு போதியதாக இருப்பதில்லை.

இதனால் வீண் போலிக் கௌரவத்தில் சமுதாயம் தறிகெட்டு ஓடுகிறது.. இது இன்று வெளிநாடுகளில் மட்டுமல்ல இலங்கையிலும் அதிகமாக உள்ளது. இலங்கை அரசாங்கம் திருமண வயதை குறைத்து செல்கிறது. அதேவேளை அறிவை பெருக்குவதில் அது தோல்வியடைந்துள்ளது.

இலங்கையின் கல்வி சர்வதேச அங்கீகாரத்தில் மிகமிக தாழ்வான இடத்தில் இருக்கிறது. அங்கு டாக்டராக படித்து என்ன பயன் என்ற கேள்வி பிள்ளைகளிடம் இல்லை. ஆகவே அறியாமையே ஒரு சமுதாய பிரச்சனையாக இருக்கிறது.

தமிழ் சமுதாயம் பணமுள்ளவனை கொண்டாடும் சமுதாயமா இல்லை படித்தவனை போற்றும் சமுதாயமா என்ற பட்டிமன்றம் அவசியமாக இருக்கிறது.

போலிக் கௌரவம் ஒரு தமிழ்ப் பெரும் பிரச்சனையாகவும் இருக்கிறது. இந்த எண்ணங்களின் குழைவாக மலர்ந்ததே இந்த இசையும் கதையும். இது ஒரு சமுதாயத்தை மட்டும் மதிப்பிடுகிறது. மற்றப்படி கதை கற்பனைதான்.

கேட்டுப்பாருங்கள்.

அலைகள் 04.01.2019 வெள்ளி

Related posts