ரஜினியுடன் அவரது மருமகனான தனுஷ் ..!

பேட்டை படத்தை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த படம் முதல்வன் பட பாணியில் உருவாவதாகவும் படத்திற்கு நாற்காலி என்ற பெயர் வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் முருகதாசை தொடர்ந்து சதுரங்க வேட்டை வினோத் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது அஜித் நடிக்கும் ஒரு ரீமேக் படத்தை இயக்க தயாராகி வரும் வினோத் அடுத்து ரஜினியை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ரஜினியுடன் அவரது மருமகனான தனுஷ் முதல்முறையாக ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக செய்தி பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் ரஜினியுடன் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பல பேட்டிகளில் கூறி வந்திருக்கிறார் தனுஷ் அதனால் இது நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

இது இவ்விதம் இருக்க தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள “பேட்ட” திரைப்படத்தை கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன.

திட்டமிட்டபடி வேலைகள் முடிந்தால் படம் பொங்கலை முன்னிட்டு கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியாகும் என தெரிகிறது.

கன்னடத்தில் பல வருடங்களாக ஒரு மொழியிலிருந்து டப்பிங் செய்யப்படும் படங்கள் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் அஜித் நடித்த விவேகம் படம் சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
இந்தப் படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ரஜினி படத்திற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது

Related posts