ஆடம்பர பங்களா பிரியங்கா சோப்ராவுக்கு காதலன் பரிசு

பிரியங்கா சோப்ராவுக்கு அவரது வெளிநாட்டு காதலன் ரூ.47 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா பரிசளித்துள்ளார். 2000ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார்.

பிறகு இந்தி படங்களில் கவனம் செலுத்திய அவர், ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றபோது, அமெரிக்காவில் வசிக்கும் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவருடன் காதல் மலர்ந்தது. சில வருடங்களாக அவர்கள் டேட்டிங் செய்து வந்தனர். சமீபத்தில் அவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது.

வரும் நவம்பர் 29ம் தேதி திருமணம் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, பிரியங்கா சோப்ராவுக்கு நிக் ஜோனஸ் ஆடம்பர பங்களா பரிசளித்துள்ளார்.

அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியிலுள்ள இயற்கை அழகு நிறைந்த பெவர்லி மலைப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பங்களாவில் பெரிய படுக்கை அறை, நீச்சல் குளம், லைப்ரரி, நவீன வசதிகளுடன் கூடிய பாத்ரூம், கண்ணை கவரும் வரவேற்பு அறை என பல்வேறு வசதிகள் இருக்கிறது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில், ரூ.47 கோடியே 54 லட்சம்.

Related posts