பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள அஜித்தின் ‘விஸ்வாசம்’

பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் வெளியானது.

அஜித்குமார் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சிவா டைரக்டு செய்துள்ளார். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் படங்கள் இவர்கள் கூட்டணியில் வந்தன. 4-வது முறையும் இணைந்ததால் விஸ்வாசம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

இதனால் அஜித்குமார் தோற்றங்களை அடுத்தடுத்து வெளியிட்டு வந்தனர். அந்த படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கினார்கள். தொடர்ந்து படம் பற்றிய விஷயங்களை அறிய காத்திருந்த ரசிகர்களுக்கு ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடலை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

இது குத்துப் பாடலாக இருந்தது. அஜித் கம்பீரமாக நடனம் ஆடினார். “செம சீனா சிதற வைக்கனும் பாத்தா பதற வைக்கனும் அப்பதாண்டா நீ என் ஆளு, மங்காத்தா கட்டைபோல இந்த வட்டாரம் நம்ம கையில். நான் நினைச்சது எல்லாம் ஒவ்வொன்னா நல்லா நடக்குது அடிச்சி தூக்கு போன்ற வரிகள் பாடலில் இருந்தன.

விஸ்வாசம் படத்தின் இன்னொரு பாடலான வேட்டி கட்டு என்ற பாடலும் வெளியிடப்பட்டு அதுவும் டுவிட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதல் இடம்பிடித்தது.

“இதில் அடுத்தவன் முன்னால எதுக்குமே கைகட்டி அடங்குற கூட்டம் இல்ல. படக்குன்னு முன்னேற ஆளாட்டம் பதுக்கியும் பார்த்தது இல்லை. சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம். மண்ணுக்கு ஒன்னுன்னா துள்ளுவோம்” போன்ற வரிகள் இடம்பெற்று உள்ளன.

பாடல்களில் ரசிகர்கள் உற்சாகமாகி வைரலாக்கி வருகிறார்கள்.

Related posts