பிள்ளைகளுக்கு உபகதை சொல்ல புதுவழி கண்ட குடும்பத்தலைவர்

டென்மார்க்கில் உள்ள கிறீன்ஸ்ரெட் நகரில் வாழும் டக்ளஸ்; ஒரு திரைப்பட இயக்குநர், நடிகர், கலைஞர் என்று பன்முக தோற்றம் கொண்டவர்.

உலகப் புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூலைப்பற்றி தனது முகநூலில் அவர் எழுதிய பதிவு ஒவ்வொரு பெற்றோரையும் ஊன்றி சிந்திக்க வைக்கிறது.

ஒரு பொறுப்புள்ள தந்தையாக வாழ்க்கையை நகர்த்தும் போது, பிள்ளைகளுக்கு உப கதைகளை சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அவர்களுடைய கற்பனை வளம் பெருகும்.

ஆனால் அன்றாடம் பாட்டி வடை சுட்ட கதையையும், முயலும் ஆமையும் ஓடிய கதையையும் சொல்லும்போது ஒரு கட்டத்தில் பிள்ளைகள் சலிப்படைந்துவிடுகின்றன.

ஆனால் டென்மார்க் போன்ற மேலை நாடுகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு உபகதைகளை சொல்லும்போது அவர்கள் வாழும் கள நிலவரங்களை புரிந்து, டேனிஸ் பாடசாலைகளில் பேசப்படும் விடயங்களை தழுவி உப கதைகளை சொன்னால் அது பிள்ளைகளின் உள்ளத்தைத் தொடுமல்வா..?

அந்த வகையில் டென்மார்க்கில் வெளியாகியிருக்கும் உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற தமிழ் புத்தகம், டென்மார்க் அரச பாடசாலைகளில் ஆசிரியராக இருந்து, ஐரோப்பிய கல்வி முறையை நன்கு அறிந்த ஆசிரியர் ஒருவர் எழுதிய நூல் என்பதால் இலகுவாக மேலை நாடுகளில் வாழும் பிள்ளைகளைச் சென்றடையும் என்ற கணிப்பை ஒரு பொறுப்புள்ள தந்தையாக டக்ளஸ் அவர்கள் எடுத்த முடிவு அவர் பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர அவரிடமுள்ள சரியான ஆர்வத்தை நமக்குக் காட்டுகிறது.

அம்மம்மா அம்மப்பா உபதை சொல்ல இல்லாத குடும்பங்களில் உபகதைகளை சொல்லது போல கதைகூற இந்த புத்தகம் உதவியாக இருப்பதாக டக்ளஸ் தெரிவிக்கிறார். தன் பிள்ளைகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து அவர் இதை முகநூலில் பதிவிட்டது ஒவ்வொரு பெற்றோரையும் சிந்திக்கத் தூண்டுகிறது.

கிறீன்ஸ்ரெட், பிலுண்ட் நகரங்களில் இந்தப் புத்தகம் இப்போது வேகமாக வழங்கப்படுகிறது. பார்த்தி, பரணீதரன் போன்றோர் இந்த அரும்பணியை முன்னெடுத்துள்ளனர். இது குறித்து டக்ளஸ் எழுதிய முகநூல் பதிவு மயிர்க்கூச்செறிய வைக்கிறது.

இதுபோல தாயகத்திலும் இந்தப் புத்தகம் பட்டி தொட்டி எங்கும் பறந்து கொண்டிருக்கிறது. ரியூப் தமிழ் புத்தகச் சந்தையின் முதல் நூலாக வெளியாகியிருக்கிறது.

தம்பிக்கு ஒரு பாட்டு – அன்பு
தங்கைக்கு ஒரு பாட்டு – வாழ்வில்
நம்பிக்கை வளர்வதற்கு – தினமும்
நான் சொல்லும் கதை பாட்டு..

———–

உலகப் புகழ் பெற்ற 10 உதைபந்தாட்ட வீரர்களின் வரலாற்று நூல் இது எனது நண்பர் திரைப்பட இயக்குனர் ,மதிப்புகுரிய ஆசிரியர் கி.செ. துரை அவர்களின் பல புத்தகங்களின் வெளியீட்டில் இதுவும் மிக சிறப்பானநூல்,
பாட்டி வடை சுட்ட கதையை பல முறை மாற்றி மாற்றி சொல்லிட்டன் பிள்ளைகளுக்கு,

அதனால இப்புத்தகத்தை ஒரு மாற்றத்திற்காக முதல் பகுதியை வாசிப்பமென்றால் கதை கேட்க வீட்டில் தங்களுக்கும் Ronaldo தெரியுமாம் ok வாங்க வாசித்து அறிவோம் என்றேன் இது தன்னம்பிக்கை நூல்,

பெற்றோர்களே நம் ஊரில் ஒரு பாடசாலை
அங்கு வசதின்மையாக வாழும் பிள்ளைகள்
உண்டு இவ்வாறான தன்னம்பிகையுடைய
நூல்களைப்படித்துப்பலன்பெற அதை நாம்
கொண்டுசெல்வோம்.

நம் தாய்மொழியாம்
தமிழ்மொழியில் வாசித்து அறிய இனிமையாகஉள்ளது.
இது இலவசமானதல்ல இந்த உழைப்பு
சமரசமற்ற கடின உழைப்பால் உருவானது
என்பதால் எம்மோடு தொடர்வு கொண்டு
உங்களின் கையால் இதை நம் உறவுகளின்
கைகளுக்கு கொண்டு செல்லுங்கள்.

யாரோ ஓரு மாணவனின் வாழ்வை இன் நூல்
மாற்றும் என்பதில் சந்தேகமில்லை..!
அந்த மாற்றம் உங்களால் எம் இனத்திற்கு
வெளிச்சமாகட்டுமே.!!

Roche Douglas

அலைகள் 06.12.2018

Related posts