கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய பரிசளிப்பு இன்று

கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள இந்தப் பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல யாழ் மாவட்டம் வரை பரந்துபட்ட அடிப்படையில் இந்த பரிசளிப்பு நடைபெறுகிறது.

சுமார் 400 வரையான மாணவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமான சான்றிதழ்களை ரியூப் தமிழ் சின்னம் பொறித்து வழங்குகிறது பாடசாலை சமூகம்.

இந்த நிகழ்ச்சியில் இன்னொரு சிறப்பம்சம், சிறப்பு சித்தியடைந்த 150 மாணவர்களுக்கு டென்மார்க் கி.செ.துரை எழுதிய உலக புகழ்பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகமும் வழங்கப்படுகிறது.

இவற்றுடன் ரியூப் தமிழ் குழுவினர் யாழ்ப்பாணம் நாவலர் வீதி ரியூப் தமிழ் காரியாலயத்தில் இருந்து புறப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்

மேலதிக விபரங்கள் வரும்.

அலைகள் 30.11.2018

Related posts