பாராளுமன்றத்திற்குள் பொலிஸார் : போர்க்களமானது

பாராளுமன்றம் தற்போதுவரை உத்தியோகபூர்வமாக கூடாத நிலையில் மகிந்தராஜபக்சவின் ஆதரவாளர்கள் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய அமளிதுமளியை தொடர்ந்து பாராளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையிலேயே மகிந்த ராஜபக்ச தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாலித தேவரப்பெரும கைதுசெய்யவேண்டும் என கோரி மகிந்த ராஜபக்ச தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதையும் அவரைச்சுற்றி ஏனைய அனைவர்களும் கூடிநின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செங்கோலுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸார் சபா பீடத்திற்குள் நுழைந்தநிலையில் அங்கு பெரும் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.

பொலிஸார் நுழைந்தபோது ஆளுந்தரப்பினர் கதிரைகள் மற்றும் புத்தகங்களால் வீசி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

————

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தின் ஜனாநாயகத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

————

பாராளுமன்றம் எதிர்வரும் 19ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரையில் பிற்போடப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை தொடர்ந்நது பாராளுமன்றம் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக பொலிஸார் பாராளுமன்றத்திற்குள் வரவழைக்கப்பட்டனர்.

Related posts