ரிலீசுக்கு முன்னே தமிழ் ராக்கர்ஸில் வெளியானது

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த டாக்ஸிவாலா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியானது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா திரைப்படங்களை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் டாக்ஸிவாலா.

இந்தப்படம் வரும் 17ம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ரிலீசாக உள்ளது. படத்தில் கேப் டிரைவராக உள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் காரில் பேய் இருப்பது போன்ற கதையம்சத்தில் இப்படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் மனமுடைந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Related posts