அயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை

அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சராயு நதிக்கரையில் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கொண்டாடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 3 இலட்சம் விளக்குகளை ஏற்றியது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்து நிமிட இடைவெளியில்,3,01,152 விளக்குகள் ஏற்றப்பட்டன. இது புதிய உலக சாதனை என்று கின்னஸ் அமைப்பின் அதிகாரி ரிஷி நாத், யோகி ஆதித்யநாத் முன்னிலையில் அறிவித்தார். இதற்கு முன்பு, அரியானாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 1,50,009 விளக்குகள் ஏற்ற்பட்டதே சாதனையாக இருந்தது என்றும் புதிய சாதனை சிறப்பு மிக்கது எனவும் ரிஷி நாத் குறிப்பிட்டார்.

Related posts