ரணில் விக்கிரமசிங்கா பதவி நீக்கம் போனது அவசரக் கடிதம்

ரணில் விக்ரமசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயாளர் கடிதம் ஒன்றை அனுப்பி ரணில் விக்ரமசிங்கவிற்கு இதனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அரசியலமைப்பு திருத்தின் 42(4) சரத்தின் பிரகாரம் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் தன்னால் நியமிக்கப்படுவதாகவும், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவருடைய பதவி நீக்கத்திற்கான காரணம் என்ன? இவைகளை அந்தச் செய்தியில் காண முடியவில்லை.

ஆனால் தான் சட்டப்படி பிரதமர்தான் என்றும் அரசியல் அமைப்பின் பிரகாரம் தன்னை பதவியில் இருந்து நீக்க முடியாதெனவும் நேற்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் செய்யப்பட்டமையானது சட்டபூர்வமான முறையில் இடம்பெற்றுள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணி மனோகரத சில்வா கூறுகிறார்.

அமைச்சரவையை மாற்றுவதற்கு அல்லது அதன் செயற்பாடுகளை மாற்றுவதற்குறிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் செய்யப்பட்டமையானது ஜனவரி 8 ம் திகதி இடம்பெற்ற செயற்பாட்டுக்கு ஒப்பானது என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ. ஆர். டி. சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப் படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், வலயத்துக்கு பொறுப்பானவர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் மற்ற நிலைய பொறுப்பதிகாரிகள் தமது பிரதேசங்ககளின் பாதுகாப்பு சம்பந்தமாக ஒழுங்கமைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சற்று முன்னர் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

Related posts