சம்பந்தன் மட்டும் போதும் மஹிந்த சமரசிங்க

வடக்கு தொடர்பான விடயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனே அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்த மஹிந்த சமரசிங்க, இதற்காக விக்னேஸ்வரனை அழைக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கில் மாத்திரமல்ல தெற்கு மற்றும் கிழக்கிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர். இவர்கள் குறுகிய நோக்கத்திற்காகவே செயற்படுகின்றனர். நாட்டில் அநாவசியமான குழப்பங்களை தோற்றுவித்து அரசியல் செய்வதே இவர்களின் நோக்கமாக உள்ளது. சுதந்திர கட்சி இவ்வகையான அரசியல் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது என்றும் தெரிவித்தார்.

கொழும்பு – 10 டாலி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts