‘மீ டூ’வில் சிம்புவை இழுப்பதா?

நடிகை லேகா வாஷிங்டனும் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறியுள்ளார்.

பாடகி சின்மயி தொடங்கி வைத்த ‘மீ டூ’ சர்ச்சை தமிழ் திரையுலகை கடுமையாக தாக்கி வருகிறது. பிரபலங்கள் பலர் இதில் சிக்கி உள்ளனர். இப்போது நடிகை லேகா வாஷிங்டனும் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறியுள்ளார். இவர் தமிழில் ஜெயம் கொண்டான், கல்யாண சமையல் சாதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

காதலர் தினம், அரிமா நம்பி படங்களில் கவுரவ தோற்றங்களில் வந்தார். இந்தி–தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில், தமிழ் திரையுலகில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயரை வெளியிடும் நேரம் வந்து விட்டது என்று அவர் கூறியிருந்தார். இதனால் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் தனது டுவிட்டரில் ‘‘ஒரே ஒரு வார்த்தை கெட்டவன். மீ டூ’’ என்று பதிவிட்டு உள்ளார். சிம்பு நடித்த ‘கெட்டவன்’ படத்தில் லேகா வாஷிங்டன் கதாநாயகியாக நடித்தார். எதிர்பாராத காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. இந்த படத்தை குறிப்பிட்டு சிம்பு மீது ‘மீ டூ’ குற்றச்சாட்டை அவர் பதிவு செய்து இருக்கிறாரோ? என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பி உள்ளனர்.

இந்த பதிவு சிம்பு ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளத்தில் லேகா வாஷிங்டனை அவர்கள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். ‘‘லேகா வாஷிங்டன் பெரிய தோல்விகளை சந்தித்து உள்ளார். இப்போது பிரபலமாவதற்காக சிம்பு பெயரை பயன்படுத்துகிறார்’’ என்று ஒரு ரசிகர் டுவிட்டரில் சாடி உள்ளார்.

Related posts