பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்

கேரள மாநிலம் வைக்கத்தைச் சேர்ந்தவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வைக் குறை பாடு உள்ளவரான இவர் பிரபலபாடகியாக உள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடி யுள்ளார். தமிழில் சொப்பனசுந்தரி நான்தானே, வாயாடி பெத்த புள்ள உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார்.

இவருக்கும் மிமிக்ரி கலைஞ ரும், வீட்டு உள் அலங்கார நிபுணருமான அனூப்புக்கும் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்றது. இந்நிலையில் வைக்கத் திலுள்ள மகாதேவா கோயிலில் இவர்களின் திருமணம் நேற்று காலை நடைபெற்றது.

மலையாள திரைப்பட இசை யமைப்பாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங் களும் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

Related posts