பரியேறும் பெருமாள்’ படக்குழுவை வாழ்த்திய கமல்

பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.

மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் பா.இரஞ்சித், தன்னுடைய ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் முதன்முதலாகத் தயாரித்துள்ள படம் இது. கதிர் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார்.

கடந்த மாதம் 28-ம் தேதி ‘பரியேறும் பெருமாள்’ ரிலீஸானது. இந்தப் படத்தைப் பார்த்த அனைவருமே, படத்தைக் கொண்டாடி வருகின்றனர். சினிமா ரசிகர்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்துள்ளான் ‘பரியேறும் பெருமாள்’.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். “நண்பர்கள் பலர் போன்செய்து படத்தைப் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி.

படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ் இருவரும் இந்த முயற்சியையும் பயிற்சியையும் தொடருங்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள்” என்றார். இதேபோல பலரிடம் இருந்தும் படத்துக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

Related posts