சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம்ஆண்டு பொன்விழா இன்று மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் எம்ஜிஆருடன் திரைத்துறையில் பங்காற்றியவர்கள் கவுரவிக்கப்படு வதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 31 மாவட்டங்களில், நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில், அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய துடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இவை மட்டுமின்றி, மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இதையடுத்து, எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இன்றுமாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

இதனுடன் சேர்த்து, தமிழ்நாடு என்று மாநிலத்துக்கு பெயர் சூட்டப்பட்டதன் 50-ம் ஆண்டு பொன்விழாவும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், புகைப்பட கண்காட்சி, பல்வேறு துறைகளின் அரங்குகளும் அமைக் கப்பட்டுள்ளன.

விழாவுக்கு, சட்டப்பேரவை தலைவர் பி.தனபால் தலைமையேற்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் பி.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,எம்பிக்கள், அதிமுகவினர், பொதுமக்கள் என லட்சக்கணக்கான வர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவில், எம்ஜிஆர் உருவப் படத்தை திறந்து வைக்கும் முதல்வர் கே.பழனிசாமி, நூற்றாண்டு நிறைவு மலரை வெளியிடுகிறார். மேலும், எம்ஜிஆருடன் திரைத் துறையில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், இசை யமைப்பாளர்கள் உள்ளிட்ட திரைக் கலைஞர்களை கவுரவிக்கிறார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர், புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சி, 3.30 மணிக்கு தொடங்கப்படும் நிலையில், 2 மணி முதல் 3.30 மணி வரை, இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அண்ணாசாலையில் நந்தனம் பகுதியில் சாலையின் இரு புறமும் விளம்பர தட்டிகள், டிஜிட்டல் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்குக்கு செல்லும் வழி நெடுகிலும் விளம்பர தட்டிகள் நிறைந்துள்ளன. நிகழ்ச்சிக்கு 7 லட்சம் பேர்வருவார்கள் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தொண்டர்களைஅழைத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இது தவிர தன்னிச்சையாக அதிக அளவில் தொண்டர்கள்வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் 2 லட்சம் பேர்வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு களை செய்துள்ளனர்.

Related posts