கோடம்பாக்கம் சினிமாவை வளைத்து போட்ட லைக்கா

லைக்கா நிறுவனம் என்றால் அவர்களை துரோகி போல காட்டும் புலம் பெயர் தமிழர்கள் ஏறத்தாழ இப்போது ஓய்ந்து போனார்கள் போலும்.

காரணம் தமிழகத்தில் இருந்து வரும் முக்கியமான திரைப்படங்களை யார் தயாரித்திருக்கிறார்கள் என்று பார்த்தால் முழுவதுமே லைக்காதான்.

இவ்வாரம் வெளிவந்த செக்கச் சிவந்த வானமும் லைக்காவின் தயாரிப்பிலேயே வந்துள்ளது. எந்திரன் 2.0 என்ற பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்படும் படமும் லைக்காவினுடையதுதான்.

மிகப்பெரிய தயாரிப்பு ஜாம்பவான்களான ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், ஏ.எம்.ரத்தினம், தாணு போன்றவர்களை எல்லாம் காணவில்லை லைக்காவே எங்கும் காணப்படுகிறது.

ஏறத்தாழ தமிழக சினிமாவே லைக்கா நிறுவனத்தின் உரிமையாளனான ஓர் ஈழத்தமிழனிடம் போய்விட்டது. கூடவே ஐங்கரனுடைய ஆதரவும் காணப்படுகிறது, இந்த இரண்டு தமிழர்களுமே இப்போது சினிமாவின் முக்கிய தாதாக்கள் ஆகிவிட்டார்கள்.

அதேவேளை யாராவது ஈழத் தமிழர்கள் இவர்களுக்கு மேல் தலை காட்டினால் அவர்களை நாராக உரித்து விரட்டிவிடுவார்களா என்ற சந்தேகம் தரும்படியாக இவர்களுடைய நகர்வு இருப்பதாகவும் சிலர் கூறுவர்.

புலம் பெயர் தமிழர்கள் படுத்துவிட்டார்கள், லைக்காவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பலர் இப்போது லைக்கா ஈழத்தமிழன் என்று கூறிவிட்டு அடங்கிவிட்டதையும் காண ஆங்காங்கு காண முடிகிறது.

அதேவேளை லைக்கா படம் எடுத்தால் பகிஷ்கரிப்பிற்குள்ளாகும் என்ற நிலையும் போய் லைக்கா இல்லாமல் வேறு யாராவது எடுத்தாலே பகிஷ்கரிப்பு வரும் என்றளவுக்கு காலம் மாறியிருக்கிறது.

அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியான எம்.ஜி.ஆர் என்ற பத்திரிகையையும் சிவாஜி என்ற பத்திரிகையையும் நடத்தியது ஒருவர்தான்.

அதுபோல லைக்கா வகையறாக்கள் யார் என்பதை அறிந்தால் புலம் பெயர் தமிழருக்கு ஞானம் பிறக்கலாம்.

அலைகள் 30.09.2018

Related posts