இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாகச் சரிந்து வரும் நிலை

அடுத்த 3 ஆண்டுகளுக்கு 10 பில்லியன் டாலர்கள் கூடுதல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு டோனல்ட் ட்ரம்ப் தலைமை அமெரிக்க அரசு கடும் நெருக்கடி கொடுத்து வருவதால் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இழுபறி நிலையில் உள்ளன.

இது தொடர்பாக இன்று இருதரப்பு விவாதம் டெல்லியில் நடைபெறுகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள பொருளாதார தேசியவாதிகள் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாக இத்தகைய நெருக்கடிகளை அளிக்கின்றனர்.

ஏற்கெனவே இறக்குமதியினால் அதிக டாலர்கள் தேவையினால் ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக வரலாறு காணாத அளவுக்கு சரிவு கண்டு வருகிறது, இதில் கூடுதல் 10 பில்லியன் டாலர்கள் கொள்முதலுக்கு உத்தரவாதம் வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் நெருக்கடி கொடுப்பதால் இந்திய அரசு கடும் சிக்கலில் உள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கு 23 பில்லியன் டாலர்கள் உபரி உள்ளது. இந்த உபரியின் பயனை இந்தியா அடைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த உபரி குறைய வேண்டும் என்பதற்காகவும் மேலும் இறக்குமதிகளைச் செய்ய ட்ரம்ப் நிர்வாக பொருளாதார தேசியவாதிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து 2+2 உரையாடல் இன்று நிகழவுள்ள நிலையில் இந்திய அதிகாரி கூறும்போது, “எங்கள் கவலைகள் எல்லாம் எஃகு மற்றும் அலுமினியம் மீதான கட்டணங்களே. மேலும் பல வேளாண் பொருட்கள் மீதான வரி ஆகியவையே” என்றார். கடந்த மாதம் வரைவு ஒப்பந்தத்தை அளித்த அமெரிக்காவின் வலியுறுத்தல் கண்டு இந்திய தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர். பயணிகள் விமானம், இயற்கை எரிவாயு ஆகியவற்றைக் கூடுதல் கொள்முதல் செய்யும் உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தமாகும் அது. இந்த ஆண்டின் முதல் 6 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான பொருட்களின் விகிதம் 28% அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்னும் இன்னும் இறக்குமதி செய்யுங்கள் என்று அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருகிறது.

Related posts

Leave a Comment