விஜயகாந்த் பணிகளை தொடர வேண்டும்

விஜயகாந்த் பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்துவந்த அவர், 31-ம் தேதி இரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. விரைவில் வீடு திரும்புவார். எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கட்சி அலுவலகம் தெரிவித்தது.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்ட போது, ”அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை உள்ளது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக் கப்பட்டுள்ளார். தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறோம்” என்றனர்.

விஜயகாந்த் உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை முடிந்த நிலையில் அவர் இன்று காலை வீடு திரும்பினார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், ”மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேலும் முழுமையான அளவில் விரைந்து உடல்நலன் பெற்று, பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடரவேண்டும் என்ற எனது விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment