அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள்

அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் – துரை தயாநிதி அழகிரி

“தி.மு.க.வின் உண்மையான அடித்தட்டு தொண்டர்கள் கோரிக்கை விடுத்த காரணத்தினால்தான் இந்த பேரணியை நடத்துவதாகவும், இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.

5-ந்தேதி நடக்கும் அமைதி பேரணி தங்கள் பலத்தை காட்டும் பேரணி அல்ல. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியாகவே அது இருக்கும்” என்று ஹலோ எப்.எம். பேட்டி ஒன்றில் துரை தயாநிதி அழகிரி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

“தி.மு.க.வில் தன்னை சேர்த்துக்கொள்ளும்படி அழகிரி தனது குடும்பத்தினரிடம் பேச்சு நடத்தவில்லையா? என கேட்டபோது, கருணாநிதி இருந்தபோது அவரிடம் மட்டும் பேசியதாகவும், மற்ற யாரிடமும் தனது தந்தை தொடர்பு கொண்டதில்லை எனவும் துரை தயாநிதி கூறினார்.

தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக சேர்ந்து அதனை ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பதே தங்களது ஆசை என கூறிய அவர் இதற்கு சித்தப்பாவிடம்(மு.க.ஸ்டாலின்) இருந்து சாதகமான பதில் வரும் என தெரிவித்தார்” என்கிறது தினத்தந்தி.

Related posts

Leave a Comment