அலைகள் வாராந்தப் பழமொழிகள் 18.03.2018 ஞாயிறு

நோயின்றி வாழ, நோயை வெல்ல மறக்கின்ற ஞானத்தை பயிலுங்கள்..

01. நேயைத் தீர்க்க இரண்டு வழிகள் உள்ளன 01. வைத்தியரிடம் போவது 02. அந்த நோயே நமக்கு இல்லை என்பது போல நடிப்பது.

02. ஒரு நோயால் நாம் பாதிக்கப்படுகின்றபோது அப்படியொரு நோய் நமக்கு இல்லை என்று நடித்தால் அது இல்லாமல் போகும். இதற்கு மறக்கின்ற ஞானம் என்று பெயர்.

03. காய்ச்சல் வந்துவிட்டதா அது இல்லவே இல்லை என்று உறுதியாக நம்பினால் அது இல்லாமலே போகும்.

04. இதற்கு மன ஒருமை என்று சொல்லுவார்கள், சரியான மன ஒருமை இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. மன ஒருமை என்றால் ஒரு புள்ளியில் மனதை வைப்பது.

05. எலும்புக்காக சண்டை போடும் இரண்டு நாய்களின் முன்னால் போய் ” உஸ் சத்தம் போடாதீர்கள் ” என்றால் அவை நம்மை பொருட்படுத்தாது. காரணம் அவற்றின் மன ஒருமை எலும்பிலேயே இருக்கிறது.

06. நமக்கு எது பிடிக்கிறதோ.. அல்லது நம்மை எது பிடிக்கிறதோ.. அதன் மீது நமது மனம் தானாக ஒன்றிவிடும்.

07. கண் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனிடம் அந்த நோயால் பாதிக்கப்பட்டவன் எது செய்யக் கூடாதோ அதைச் செய் என்றார் குரு. அவன் புத்தகங்களை வாசித்து தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து தனக்கு கண் நோயே இல்லையென கருதிக் கொண்டானாம். சில நாட்களில் நோயும் பறந்ததாம்.

08. மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கும் ஒருவன் தன்னை மறந்து, குஷியாக படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது அது நின்றுவிடுகிறதே எப்படி..? ஆம்.. அவன் மூக்கு ஒழுகுவதையே மறந்துவிட்டதுதான்.

09. ” காய்ச்சல் அடிக்கும்போது குளிர்ந்த நீரில் குளியுங்கள் ” என்று காந்தி சொன்னது இதைத்தான்.

10. நோயை வெற்றி கொள்கிற அரு மருந்தாக நமது உடலே இருக்கிறது. கடவுள் எவ்வளவு அற்புதமாக அதைப் படைத்திருக்கிறான் பாருங்கள்.

11. இப்படி அற்புதமாக கடவுள் நமது உடலைப் படைத்திருக்க பணம் கொடுத்து, காவல் இருந்து மருத்துவரிடம் மருந்து வேண்டித்தான் சுகமடைய வேண்டுமா..? டாக்டரிடம் போவதுதான் ஒரே வழியென நினைத்தால் அதுவும் ஒரு வியாதியே.

12. ” நாம் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரையும் நமது உடலுக்குள் போகும் அன்னியன்தான் ” என்று உலகப் புகழ் பெற்ற டாக்டத் தீபக் சோப்ரா கூறுகிறார்.

13. மாத்திரைகள் சாப்பிடுவதால் குணம் ஏற்படாது, மாத்திரைகள் நமது உடம்பில் கடவுளால் படைக்கப்பட்டிருக்கும் குணம் ஏற்படுத்தும் விஷயங்களை தூண்டிவிடும் வேலையைத்தான் செய்கின்றன அவ்வளவுதான்.

14. மருந்துகளுக்கு சக்தி இல்லை என்று கூறமுடியாது இல்லாவிட்டால் மருந்து சாப்பிடுவதால் வரும் பக்க விளைவுகள் வராதன்றோ..? ஆனால் எந்த அளவுக்கு மருந்தைக் குறைக்கிறோமோ அந்தளவுக்கு மருந்தின்றி நோய் குணமாகும்.

15. ஆரோக்கியம் என்பது நம்மில் உள்ள இயற்கை நிலை.. நோய் என்பது நம் மீது செலுத்தப்படும் வன்முறை. ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படுவது ஆரோக்கியத்திற்கு எதிரானது.

16. ஆரோக்கியம் என்பது ஒரு மனோநிலை, நோய் என்பது அதற்கு எதிரான மனோநிலை.

17. ரத்த அழுத்தம் கொழுப்பு போன்றவை டென்சனின் காரணமாகவும் கூடுகிறது.

18. ” இந்தப் பொருள் சாப்பிடுவது நமக்கு ஒத்துவராது ” என்று நினைத்தால் நிச்சயமாக அது ஒவ்வாமையையே ஏற்படுத்தும்.

19. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு தொண்டையில் புற்று நோய் வந்தது, ” கடவுளை வேண்டக்கூடாதா..?” என்று பலர் கேட்டனர். ” இவ்வளவு காலமாக இறைவன் கொடுத்த ஆரோக்கியத்தை எல்லாம் வேண்டிக் கொண்டேன் நோயை மட்டும் வேண்டாமென எப்படிக் கேட்ப..” தென்றாராம்.

20. ” அந்த டாக்டர் நமது குடும்ப டாக்டர் ” என்று பெருமையடிக்காமல் நோய் வந்தபோது நாமாகவே தீர்க்க முயல வேண்டும். அதற்கான வழியையும் இறைவன் நமக்கு தந்துள்ளான்.

21. ஒவ்வொரு நோயும் நாம் செய்யும் தவறுகளுக்கான எச்சரிக்கை நாம்தான், அதை பொருட்படுத்தத் தயங்குகிறோம்.

22. உங்கள் உடலை வைத்து பல அற்புதங்களை நிகழ்த்தலாம் அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

23. இந்த உடலின் இரகசியங்களில் ஒரு சத வீதத்தைக்கூட வாழ் நாளில் புரிந்து கொள்ள முடியாது.

24. நாம் கற்பனையே செய்ய முடியாதளவுக்கு அறிவு நிரம்பியதாக இருக்கிறது நமது உடல்.

25. உடலின் மொழியை நாம் கேட்பதே இல்லை.. வெற்றி வேண்டும் என்று நினைப்பேர் உடலின் மொழியை ஒரு காலமும் அலட்சியம் செய்யக்கூடாது.

அலைகள் 18.03.2018 ஞாயிறு

Related posts

Leave a Comment