அலைகள் வாராந்தப் பழமொழிகள் 09.05.2018 புதன்

நல்ல நூல்களை படித்து வடித்துத் தரும் தகவல் துளிகள்..

01. மனதை ஒருமைப்படுத்துங்கள் என்றால் அதற்கு ஒரு பொருள் உண்டு. உங்கள் கனவு பலித்துவிட்டதாகவே மனக்கண்ணால் கனவு காணுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் வெறுமனே அது பகல் கனவாக இருக்கக் கூடாது என்றும் எச்சரிக்கிறார்.

02. காட்சிகளை மனதால் காண்பதும் ஒரு வெற்றிக்கான வழிகாட்டியே. சக்தி வாய்ந்த மன ஓவியங்களை உருவாக்க பல நூல்கள் உதவியாக உள்ளன.

03. வெற்றியை ஏற்படுத்திக் கொள்வதற்கு முதற்படி திட்டமிட்ட குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்வதுதான். அதற்கு மனதை ஒருமைப்படுத்த வேண்டும்.

04. உங்கள் மனதில் ஒரு திட்டமோ யோசனையோ தோன்றும்போது மனம் ஒரு உந்துதலை ஏற்படுத்துகிறது என்பதை புரியுங்கள். மனதில் அதை ஒரு பலமான ஆசையாக மாற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

05. உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும் என்று நம்பினால் அதற்கான ஆற்றல்கள் உங்களிடம் வந்து சேரும்.

06. உங்கள் மனதில் ஆழமாகக் குடிகொண்டிருக்கும் ஆசை நிறைவேற வேண்டும் என்றால் மனதை அதில் நன்கு ஒருமுகப்படுத்துங்கள். இதன் மூலம் கிடைக்கும் சக்தியானது பலவித ஆற்றல்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

07. இணக்கமான சூழ்நிலை ஒன்று சேரும்போது இயற்கையாலும் வெல்ல முடியாத ஓர் அமானுஷ்ய சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. உறுதியான நம்பிக்கையுடன் செயற்பட்டு உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுங்கள்.

08. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்களின் திறமைகள் ஒன்று சேரும்போது இணக்கமான உறவின் காரணமாக நமது குறிக்கோள்கள் நிறைவடைகின்றன.

09. சிலர் உங்களிடம் நம்பிக்கை ஆர்வத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் அருகில் இருக்கும்போது பெரிய காரியங்களை செய்வதற்கான தூண்டுதல் ஏற்படக் காண்பீர்கள்.

10. அதேவேளை வேறு சிலர் அருகில் வந்தால் உங்கள் ஆற்றல் குறைந்து போவதையும், உங்களுக்கு தடுமாற்றம் ஏற்படுவதையும் உணர்வீர்கள்.

11. உங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் திடமான நம்பிக்கையுடன் திட்டமிட்ட குறிக்கோளை அடைவதற்கு பாடுபட்டால் அனைவருமே இயற்கையாலும் வெல்ல முடியாத அமானுஷ்ய ஆற்றலைப் பெற்றுவிடுவீர்கள்.

12. ஒற்றை ஹைட்ரஜன் அணுவும் ஒற்றை ஆக்ஸிசன் அணுவும் சேர்ந்தால் தண்ணீர் உருவாகாது. இரண்டு ஹைட்ரஜன் அணுவும் ஒற்றை ஆக்ஸிசன் அணுவும் சேர்ந்தால் மட்டுமே உருவாகும். அதுபோல சரியான நபர்கள் இணையாது வெற்றி சாத்தியமாகாது.

13. சரியான நிலத்தில் நட்டால் மட்டுமே ஆப்பிள் வளரும் அதுபோல சரியான நபர்கள் சேர்ந்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும்.

14. பெண்ணின் மனம் கணவர் மனதுடன் இணைந்தால் மட்டுமே தேவையான ஊக்கம் கிடைக்கும்.

15. பெரிய மனிதர்கள் என்று கருதப்படும் பலருடைய வாழ்க்கையை படித்தேன். அவர்களுடைய உயர்வு தற்செயலாகக் கிடைத்ததல்ல. அவர்களுடைய உயர்வுக்கு அவர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

16. வெற்றியாளர் ஒவ்வொருவரும் அதற்கான சம்பவங்களையும் பின்னணிகளையும் தாமே உருவாக்கிக் கொண்டனர். அரிதாகவே ஒரு சிலர் மட்டும் பொது மக்களின் ஆதரவு புகழ் துதிகளினால் உயர்வு பெற்றுள்ளார்கள்.

17. ஒரு மகத்தான மனிதரை உருவாக்கி இந்த உலகத்திற்கு அளிப்பதே ஒரு நாடு காணும் வெற்றியாகும். ஒரு நாடு கயவர்களை உருவாக்கினால் அது அந்த நாட்டுக்கே கேடாகிவிடும்.

18. ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் அவருடைய மனைவிதான். அவருடைய நல்லிணக்கமே போர்டின் ஆர்வம் கலந்த குறிக்கோளை எட்ட துணையாக நின்றது. ஆகவேதான் ஒருவருடைய எண்ணத்துடன் நல்லிணக்கம் காணாத மனைவி வந்தால் அனைத்து திறமைசாலிகளும் தோல்வியடைகிறார்கள். அதுபோல கணவன் வந்தால் மனைவி தோற்றுவிடுகிறாள்.

19. எடிசனிடமிருந்த மிகப் பெரும் செல்வம் அவருடைய மனதை ஒருமைப்படுத்தும் கலைதான் என்று அவருடைய மனைவி கூறுகிறார்.

20. ஏதாவது ஒரு பரிசோதனை அல்லது ஆய்வில் ஈடுபட்டால் அவர் எதிர்பார்த்தது கிடைக்கும்வரை எடிசன் ஆர்வத்துடன் போராடுவார். எடிசனுக்கு பின்னால் இரு பெரும் சக்திகள் இருந்தன. ஒன்று மன ஒருமைப்பாடு இன்னொன்று அவருடைய மனைவி.

21. ஒருவர் குறிப்பிட்ட விடயத்தில் கவனம் செலுத்தும் போது அதனுடன் சம்மந்தப்பட்ட செய்திகள் தானாகவே அவரிடம் சென்றடைகின்றன. அதற்கு இயற்கை சரியான ஏற்பாடுகளை செய்து தருகிறது.

22. மனம் என்ற மண்ணில் பலமான ஆசை விதையை ஊன்றினால் அதனுடன் சம்மந்தப்பட்ட விடயங்களை இயற்கை தானாகவே ஒருங்கிணைத்து கொடுக்கும்.

23. ஒரு மனிதன் விஞ்ஞான மேன்மை பெறுவதற்கு மற்ற அறிவியல் துறைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நிற்பது போல மனோதத்துவமும் உதவி செய்கிறது.

24. இதுவரை நாம் அறிந்த சக்திகளில் சிந்தனைதான் பலமான ஒருங்கிணைந்த சக்தியாக இருக்கிறது. அதை சரியாக டியூன் செய்தால் அபார சாதனைகளை படைத்துவிடலாம்.

25. பல மனிதர்களின் மனங்கள் மாஸ்டர் மைன்ட் சக்தியால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்று சேர்கின்றன.

அலைகள் 09.05.2018

அலைகள் பழமொழிகள் தொடர்ந்தும் வரும்..

Related posts

Leave a Comment