இலங்கை கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு !
August 25, 2008
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களை வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள வேறு பல்கலைக்கழகங்களுடன் தற்காலிகமாக இணைக்க உயர் கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பல்லைக்கழக வளாகத்திற்குள் சிங்கள மாணவரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலையையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இப் படுகொலைச் சம்பவமானது துரதிர்ஷ்டவசமானது என கூறிய உயர் கல்வி அமைச்சரான பேராசிரியர் விஸ்வ வர்ணபால அங்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதாகவும் இதன் காரணமாகவே பெற்றோர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில் தற்காலிகமாக இம் மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.